திரையுலகினரை உலகம் முழுவதும் மகிழ்விக்கும் கலை நிகழ்வுகளில் சர்வதேச திரைப்பட விழாக்கள் முதன்மையானவை. குறிப்பாக கான், வெனிஸ், நியூயார்க், பெர்லின், டொரண்டோ, மாஸ்கோ, கெய்ரோ, லோகர்னோ உள்ளிட்ட 25 பெரும் புகழ்பெற்ற உலகப் படவிழாக்களில் அதிகாரபூர்வ திரையிடலுக்கு (Official selection) தேர்வு பெறும் படங்கள், அதன்பின்னர் நூற்றுக்கும் அதிகமான படவிழாக்களில் எளிதாக நுழைந்துவிடுவதுடன், சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுத் திரும்பும் தகுதியை அடைந்துவிடுவதைப் பார்த்து வருகிறோம். அந்த அளவுக்கு உலகப்பட விழாக்கள் தரமான படங்களுக்கு பெரும் சாளரமாக விளங்கி வருகின்றன.
ஆனால், கரோனா பேரிடர், 2020-ம் ஆண்டுக்கான உலகப் படவிழாக்களை கேள்விக்குறியாக்கிவிட்டது. அநேகமாக இந்த ஆண்டுக்கான சர்வதேசப் படவிழாக்கள் அனைத்தும் ரத்துசெய்யப்படும் நிலையே உருவாகும் என்று உலகப் படவிழாக் குழுக்களில் இடம்பெற்றிருப்பவர்கள் உலகம் முழுவதும் ட்வீட் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில் ஆச்சரியகரமாக சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற இரண்டு உலகப் படவிழாக்களில் ஒன்றான ‘விசன்ஸ் து ரீல்’ (visions du réel) திரைப்படவிழாவை இணையத்தில் முற்றிலும் இலவசமாக நடத்தி வருகிறார்கள். கடந்த 49 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெற்றுவரும் இப்படவிழாவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச ஆவணப்பட பார்வையாளர்களும் படைப்பாளிகளும் ஆண்டுதோறும் கலந்துகொள்கின்றனர். ‘நியோன் படவிழா’ என்று அழைக்கப்படும் இது, ஆவணப்படங்களுக்கு முதன்மை அளித்து நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற சர்வதேசப் படவிழாவாகும். ஆங்கிலத்தில் Visions of Reality ரியாலிட்டி என்ற பொருளைத் தரும் இப்படவிழா, கரோனா காரணமாக தற்போது முற்றிலும் இலவசமாக இணையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இப்படவிழாவில் பங்கேற்கும் ஆவணப்படங்களை 25 பேர் கொண்ட சர்வதேச ஆவணப்பட பட படைப்பாளிகள் அடங்கிய தேர்வுக்குழு பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்கிறது. உலகம் தழுவிய அளவில் இங்கே குவியும் 1000க்கும் அதிகமான படங்களிலிருந்து இரவு பகலாக வடிகட்டித் தேர்வு செய்யப்பட்ட சுமார் 150 புதிய ஆவணப்படங்களை வரும் மே மாதம் 2-ம் தேதி வரை இலவசமாகக் காணலாம்.
ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளில் படங்களுக்கான சப்டைட்டில்கள் இடம்பெற்றுள்ளன. https://www.visionsdureel.ch/en என்ற தளத்துக்குச் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவிட்டு, நீங்கள் பார்க்க விரும்பும் படத்தைத் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்தபின் உங்களுக்கு மின்னஞ்சலில் இணைப்பு அனுப்பப்படும். அதைப் பின்தொடர்ந்து சென்று நீங்கள் பார்க்கலாம். பார்வையாளர்களின் படையெடுப்பு அதிகமாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் முதலில் வரும் 500 பேர் என்ற அளவில் ஆன்லைன் இணைப்புகள் வழியாக படங்களைக் காண அனுமதிக்கிறார்கள். உலகின் தலைசிறந்த ஆவணப்படங்களைக் காணும் அதே நேரம், உலகப் புகழ்பெற்ற பெண் திரைப்படக் கலைஞர் கிளையர் டெனிஸ் (Claire Denis), ஆஸ்கர் விருது பெற்ற பிரேசில் இயக்குநர் பெட்ரா கோஸ்டா ( Petra Costa) சுவிட்சர்லாந்தின் முக்கியத் திரைப்படைப்பாளியான கனேசிய பீட்டர் மெட்லர்(Peter Mettler) ஆகியோரின் பிரத்யேக படங்களும், ஆன்லைன் வகுப்பு திரைப்படப் பயிற்சிப் பட்டறைகளும் ‘ஆனலைன் பதிப்பாக’ இடம் பெற்றுள்ள இந்த உலகப் படவிழாவில் இடம்பெற்றுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago