‘அறுவடை நாள்' இயக்குநரின் கரோனா காலக் கண்ணீர்க் கதை!

By ஆர்.சி.ஜெயந்தன்

90-களில் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற படம் ‘அறுவடை நாள்’. பிரபு - பல்லவி ஜோடி நடிப்பில் 1986-ல் வெளியான இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார். அதன்பிறகு, ‘பிக்பாக்கெட்’, ‘இரும்புப் பூக்கள்’, ‘உருவம்’ என மூன்று படங்களை இயக்கியிருந்தாலும் இவரது திரைக்கதைத் திறமைக்கு பாலா உள்ளிட்ட முக்கிய இயக்குநர்கள் தலை வணங்குவார்கள். தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்பு அமையாமல் போனதில் நடிகராக முகம் காட்டத்தொடங்கினார்.

வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெயில்’ படத்தில் மாயாண்டித் தேவர் எனும் கோபக்கார அப்பாவாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் சிறந்த நடிகராகவும் இடம்பிடித்தார். அதன்பின் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஈர்த்த ஜி.எம்.குமாரை, பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் இவன்’ இவரைப் பார்த்து ‘அடேங்கப்பா!’ என்று சொல்ல வைத்தது. அதில் இவர் ‘ஹைனெஸ்’ என்ற ஜமீன்தார் வேடத்தில் நம்பும்படியாக நடித்து அசத்தியிருந்தார். நடிப்பிலும் தாம் தனித்துவமான திறமையாளர் என்று காட்டிய ஜி.எம்.குமார், தன்னை நாடிவரும் திரைக்கதை வேலைகளைச் செய்து கொடுப்பதில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கரோனா கால ஊரடங்கை ஒட்டி, 'டாக்டர் சைமன்' உடல் அடக்கத்தில் நேர்ந்த சமூக அவலத்தைத் தாக்கமாகக் கொண்டு ஒரு கரோனா காலக் கண்ணீர்க் கதையை எழுதியிருக்கிறார். அதற்கு ‘சவப்பெட்டி’ என தலைப்பும் வைத்து, அதைத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதோ அந்தச் சின்னக் கதை.

சவப்பெட்டி

ஜான் சவப் பெட்டிகள் செய்பவன். ஊரில் மரணம் விழுந்தால்தான் அவன் வீட்டில் சோறு பொங்கும். மற்றவர்கள் அழும் நேரத்தில் அவன் வீட்டில் சந்தோஷம். மரணமே இல்லாத உலகத்தை நினைத்து அவன் பாதி தூக்கத்தில் வேர்த்து எழுந்து தன் மனைவி மக்களை நினைத்து பதறிய நாட்கள் பல. அவன் செய்யும் சவப் பெட்டியை அவன் சொன்ன விலையிலிருந்து ஒரு பைசா கூட குறைத்துக் கொடுத்ததாக சரித்திரமே கிடையாது. கூடுதலாகக் கொடுத்தாலும் வாங்க மாட்டான்.

அவனுடைய ஒரே இருபது வயது மகனுக்கு கரோனா நோய் தொற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அவனைக் குணப்படுத்திய டாக்டர், அவனிடமிருந்து நோய் தொற்றி மரணமடைகிறார். அவரைப் புதைக்க ஊர் மக்கள் விடவில்லை. பின் போலீஸ் வந்ததும் சவப்பெட்டி இல்லாமல் புதைக்கப்படுகிறார்.

அன்று இரவு ஜான் தன் மனைவிடம் குடும்பத்தைப் பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டு ஒரு சவப்பெட்டி ஒரு மண்வெட்டி இரண்டு மெழுகுவர்த்தியுடன் அந்த டாக்டர் புதைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று அவர் உடலைத் தோண்டி எடுத்து சவப்பெட்டியில் வைத்துத் திரும்பவும் புதைக்கிறான். மெழுகுவர்த்தியை ஏற்றி அன்று இரவு அந்தக் கல்லறை பக்கத்தில் அமர்ந்து இருக்கிறான். மறுநாள் அவனை போலீஸார் பிடித்துச் செல்கின்றனர். அனுமதி இல்லாமல் கல்லறையைத் தோண்டியதற்கு...

இவ்வாறு கதையை எழுதியுள்ளார் ஜி.எம்.குமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்