விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து விசாரித்தோம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து வெளியீட்டுக்குத் தயாராக வைத்துள்ளது படக்குழு.
இன்னும் 20 நாட்கள் இறுதிக்கட்டப் பணிகள் இருப்பதாகவும், 'மாஸ்டர்' எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த லாக் டவுனைப் பயன்படுத்தி வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை டிஜிட்டல் நிறுவனங்கள் கைப்பற்றி வருகின்றன. இதில் முதல் படமாக 'பொன்மகள் வந்தாள்' படம் மே முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது.
தற்போது 'மாஸ்டர்' படமும் டிஜிட்டலில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறிவருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து விசாரித்தபோது, "'மாஸ்டர்' படம் முதலில் திரையரங்குகளில்தான் வெளியாகவுள்ளது. அதற்குப் பிறகுதான் டிஜிட்டலில் வெளியாகும். இந்தத் தகவலால் 'மாஸ்டர்' படக்குழுவினர் தங்களுடைய விநியோகஸ்தர்களுக்கு முதலில் திரையரங்குகள்தான் என்று உறுதி அளித்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டது.
» சமூக விலகலைத் தீவிரமாகப் பின்பற்றுங்கள்: நடிகை ஹேமமாலினி அறிவுறுத்தல்
» துல்கர் சல்மான் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல; காட்சியை நீக்க வேண்டும்: சீமான் எச்சரிக்கை
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago