உடல்நலக் குறைவு காரணமாக பிரபல மலையாள நடிகர் ரவி வல்லத்தொல் மரணமடைந்தார். அவருக்கு வயது 67.
மறைந்த நாடக நடிகர் டி.என்.கோபிநாதன் நாயரின் மகனான ரவி வல்லத்தொல் 1987ஆம் ஆண்டு ‘ஸ்வாதி திருநாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார். ‘சீசன்’, ‘கோட்டயம் குஞ்சச்சன்’, ‘காட்ஃபாதர்’, ‘சார்கம்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் 2003ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருது பெற்றுள்ளார்.
25க்கும் அதிகமாக சிறுகதைகளையும் எழுதியுள்ள ரவியின் இரண்டு கதைகள் தொலைகாட்சி தொடர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. மனநலம் குன்றிய குழந்தைகளுக்காக தன் மனைவி கீதா லட்சுமியுடன் ‘தனல்’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களாகவே கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ரவி நேற்று (26.04.20) திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார்.
» ரசிகர்களிடம் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் தொடர்பான ரகசியங்கள் பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ்
» வெளியே லட்சக்கணக்கானோர் அழுது கொண்டிருக்கின்றனர்: ஏ.ஆர்.ரஹ்மான்
ரவியின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மலையாள சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago