விஜய் நடித்த 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவான் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் - அட்லி கூட்டணியில் உருவான முதல் படம் 'தெறி'. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் 75 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 175 கோடி ரூபாய் வசூல் செய்ததாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர். இதில் சமந்தா, ஏமி ஜாக்சன், மறைந்த இயக்குநர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், மனோபாலா, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்தப் படத்துக்கு, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார்.
இந்தப் படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பால், இதன் ரீமேக் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. நீண்ட நாட்களாகவே இதன் ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இறுதியாக, இந்தப் படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் அட்லியும் வருண் தவானும் நட்பு பாராட்டினார்கள். 'தெறி' ரீமேக்கில் வருண் தவான் நடிக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் தன் நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே வசூல் ரீதியாகப் பெரும் வரவேற்பு கிடைக்காத காரணத்தால், 'தெறி' ரீமேக்கில் நடித்து முடிவு செய்திருக்கிறார் வருண் தவான்.
» உங்கள் குழந்தைகளைத் தேவதைகளாக்குங்கள்; அரக்கர்களாக அல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்
» நடிகை தேவிகாவின் 77-வது பிறந்த தினம்: சொன்னது நீதானா... சொல்.. சொல்.. என்னுயிரே..!
'தெறி' படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டதாகவும், அதன் திரைக்கதையை மாற்றியமைப்பதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தக் கதையை அட்லி இயக்கவில்லை. ஏனென்றால், அவர் ஷாரூக் கான் நடிக்கவுள்ள படத்தை இயக்குவதற்கான பணிகளைக் கவனித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
27 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago