பிரபாஸுடன் திருமணம் தொடர்பாக வெளியான வதந்திக்கு நடிகை நிஹாரிகா விளக்கம் அளித்துள்ளார்.
சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா. 2016-ம் ஆண்டு 'ஓகா மனசு' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இதுவரை ஒட்டுமொத்தமாக 5 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். இதற்குப் பிறகு அவருக்குத் திரையுலகில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் திருமணம் செய்யவுள்ளார் என்று வதந்திகள் பரவின. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் குடும்பத்தினர் நடிகர் பிரபாஸுக்கு நிஹாரிகாவைத் திருமணம் பேசி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. பிரபாஸுக்குத் திருமணம் என்று இந்தச் செய்தி வைரலாகப் பரவியது.
» மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்த ரவீணா டண்டன் பிரச்சாரம்
» நானும் என் தந்தையும் வெவ்வேறு சிந்தனையுடையவர்கள்: சித்தார்த் மல்லையா
இந்த வதந்தி தொடர்பாக நிஹாரிகா, "இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்றும் அவற்றை மக்கள் எப்படி நம்புகிறார்கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. இந்த வதந்திகள் எல்லாம் உண்மையற்றவை, முற்றிலும் ஆதாரமற்றவை" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago