நடிகை ஜோதிர்மயி மொட்டையடித்துக் கொண்டுள்ள புதிய புகைப்படத்தை அவரது கணவரும், இயக்குநருமான அமல் நீரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மலையாள நடிகையான ஜோதிர்மயி, தமிழில் நான் அவனில்லை, தலைநகரம், அறை எண் 305- கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர். தெலுங்கிலும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கடைசியாக 2013-ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடித்தார் நடிகை ஜோதிர்மயி. அதன் பிறகு அவர் தனிப்பட்ட சில காரணங்களால் திரைப்படங்களில் நடிக்கவில்லை. சமூக வலைதளங்களிலும் அவருக்கு எனத் தனியான கணக்கு இல்லை.
2004-ஆம் ஆண்டு நிஷாந்த் என்பவரை மணந்த ஜோதிர்மயி 2011-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர் 2015-ஆம் ஆண்டு, பிரபல மலையாள ஒளிப்பதிவாளர், இயக்குநர் அமல் நீரத்தை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அமல் நீரத், தனது மனைவி ஜோதிர்மயியின் புகைப்பட்ம ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் ஜோதிர்மயி தலையில் முடி இல்லாமல் மொட்டையடித்துக் காணப்படுகிறார். இந்த புகைப்படத்துடன், 'தமஸோமா ஜ்யோதிர்கமய' (இருட்டிலிருந்து எங்களை வெளிச்சத்துக்கு வழி நடத்திச் செல்) என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தின் வரிகளைப் பகிர்ந்துள்ளார்.
ஜோதிர்மயியின் இந்த புதிய தோற்றம் குறித்து பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். அவர் எதற்காக மொட்டையடித்துக் கொண்டார் என்பது பற்றிய தகவல் எதுவும் பகிரப்படவில்லை. இந்த புகைப்படத்தின் கீழ் சக நடிகைகள் நஸ்ரியா, ரீமா கல்லிங்கல், ஸ்ரீந்தா உள்ளிட்டோர் பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago