ஹாலிவுட் படங்களில் இந்தியாவை சரியாக காட்டவில்லை - ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர் கருத்து

‘தோர்’ நடிகர் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’. நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சாம் ஹார்க்ரேவ். ‘அவெஞ்சர்ஸ்’ படங்களின் இயக்குநர்களில் ஒருவரான ஜோ ருஸ்ஸோ இப்படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். ரந்தீப் ஹோண்டா, பங்கஜ் த்ரிபாதி, பியான்ஷு பைன்யுல்லி, ருத்ராக்‌ஷ் ஜைஸ்வால் உள்ளிட்ட இந்திய நடிகர்களும் நடித்துள்ளனர்.

சர்வதேச க்ரிமினல் ஒருவரின் கடத்தப்பட்ட மகனை ஹெம்ஸ்வொர்த் மீட்பதே படத்தின் கதை. 2018-ம் ஆண்டே படப்பிடிப்பு முடிந்தாலும் தற்போதுதான் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் பல காட்சிகள் இந்தியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ஜோ ருஸ்ஸோ கூறியுள்ளதாவது:

இந்தியா ஒரு அழகான நாடு. ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் இந்தியாவை அரிதாகத்தான் காட்டியுள்ளார்கள். எக்ஸ்ட்ராக்‌ஷன் படத்தில் சில அழகான கலாச்சார பார்வைகள் இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளது. படத்திலும் அது மிகவும் அழகாக வந்துள்ளது.

இந்தியாவில் முதல்நாள் படப்பிடிப்பை பாரம்பரிய பூஜையுடன் தொடங்கினோம். இந்திய பாரம்பரியம் தொடர்பான பல விஷயங்களை படத்தயாரிப்பில் ஈடுபடுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வரும் ஏப்ரல் 24 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’ படம் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE