கரோனா போராளிகளுக்கான ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்ற ஷாரூக் கான் - உலக சுகாதார நிறுவனம் நன்றி 

கரோனா நோய்த்தொற்றை தடுக்க கடுமையாக போராடி வரும் மருத்துவப் பணியாளர்களுக்காக உலக சுகாதார நிறுவனம் சார்பில் ‘ஒன் வேர்ல்ட்: டூகெதர் அட் ஹோம்’ என்ற ஆன்லைன் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 70 கலைஞர்களுடன் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானும் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் லேடி காகா, பில்லி ஜோ ஆர்ம்ஸ்ட்ராங், க்ரிஸ் மார்ட்டின், டேவிட் பெக்காம், ஜெனிஃபர் லோபஸ், ஓப்ரா வின்ஃப்ரே, பிரியங்கா சோப்ரா, டெய்லர் ஸ்விஃப்ட் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த ஆன்லைன் நிகழ்வின் மூலம் 127 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம் நடிகர் ஷாரூக் கானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

உலக சுகாதார நிறுவனம் மற்றும் குளோபல் சிட்டிசன் அமைப்புடன் இணைந்து ‘ஒன் வேர்ல்ட்: டுகெதர் அட் ஹோம்’ நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு நன்றி ஷாரூக். ஒன்றிணைந்து உலகை பாதுகாப்போம்.

இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெர்வித்துள்ளார்.

‘ஒன் வேர்ல்ட்: டூகெதர் அட் ஹோம்’ நிகழ்வை பிரபல தொகுப்பாளர்களான ஜிம்மி கிம்மெல், ஜிம்மி ஃபாலன், ஸ்டீபன் கால்பர்ட் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE