தேசிய ஊரடங்கை முன்னிட்டு, பிரபலமான பழைய தொடர்கள் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இதில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு உருவான மறைந்த ராமானந்த் சாகர் தயாரித்து இயக்கிய தொடரான 'ராமாயணம் ' தொடர், ஒரு நாளை இரண்டு பகுதிகள் என சனி, ஞாயிறில் நான்கு பகுதிகள் ஒளிபரப்பானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர் எண்ணிக்கையை மதிப்பீடும் பார்க் அமைப்பின் அறிக்கை படி, 'ராமாயணம் ' தொடருக்கு மொத்தம் 170 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்தனர்.
ராமாயணம் மறுஒளிபரப்பின் வெற்றியைத் தொடர்ந்து குழந்தைகளைக் கவர ‘சோட்டா பீம்’ கார்ட்டூன் தொடரை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து வார்னர் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தலைவர் சித்தார்த் ஜெயின் கூறியிருப்பதாவது:
இது போன்ற சவாலான தருணங்களில் போகோ சேனலின் நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பொழுதுபோக்காக இருக்கும் என்று நம்புகிறேன். தூர்தர்ஷன் போன்ற ஒரு பிரபலமான சேனலோடு இணைவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த ஒப்பந்தம் நாடு முழுவதும் உள்ள ஏராளமான இளம் ரசிகர்களை ஈர்க்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago