போக்கர் விளையாட்டு மூலமாக 1.75 மில்லியன் டாலர்களை நிவாரணத்துக்காகச் சேர்த்த ஹாலிவுட் நட்சத்திரங்கள்

By ஐஏஎன்எஸ்

பென் ஆஃப்லெக், மேட் டேமன் இருவரும் சேர்ந்து, கோவிட்-19 நிவாரண நிதியாக 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை போக்கர் விளையாட்டின் மூலம் சேர்த்துள்ளனர்.

இணையத்தில் நடந்த பிரபலங்கள் கலந்துகொண்ட போக்கர் ஆட்டத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பென் ஆஃப்லெக்கும், மேட் டேமனும் கலந்து கொண்டனர். ஃபீடிங் அமெரிக்கா என்ற லாப நோக்கமற்ற தொண்டு அமைப்புக்காக 1.75 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதில் சேர்த்தனர். இந்த அமைப்பு, கோவிட்-19 ஊரடங்கால் உணவின்றித் தவிப்பவர்களுக்கு உணவளிக்கும் பணியைச் செய்து வருகிறது.

மேலும் டாம் ப்ராடி, ஆடம் சாண்ட்லர், ப்ரையான் க்ரான்ஸ்டன் தலா 10,000 டாலர் நிதியை இதற்காகச் சேர்த்துள்ளனர். மேலும் இந்த ஆட்டத்தில் சாரா சில்வர்மேன், ஜேசன் பேட்மேன், டாபி மெக்குவயர், கெவின் ஸ்மித் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, இந்த வாரத்தின் தொடக்கத்தில், பென் ஆஃப்லெக் இந்த ஆட்டம் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தோழமையான போக்கர் ஆட்டத்தில், தேவையிருப்பவர்களுக்காக நிதி திரட்ட என்னுடன் சேருங்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஃபீடிங் அமெரிக்கா அமைப்பின் சேவை முன்னெப்போதையும் விட இப்போது முக்கியமானது என்று பென் ஆஃப்லெக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்