தாய்மை தான் என் வாழ்க்கையின் மிக மிக மிகச் சிறந்த காலம்: கேமரூன் டியாஸ்

By ஐஏஎன்எஸ்

தாய்மை தான் தனது வாழ்க்கையில் நடந்த மிகச்சிறந்த விஷயம் என நடிகை கேமரூன் டியாஸ் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் 30 அன்று கேமரூன் டியாஸ், பென்ஜி மேடன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் நடந்த உரையாடல் ஒன்றி, கடந்த சில மாதங்கள் தனது குழந்தையைப் பார்த்துக் கொண்டதைப் பற்றியும், கோவிட்-19 தொற்று பிரச்சினையில் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியிருப்பதைப் பற்றியும் டியாஸ் பேசியுள்ளார்.

"எனக்குத் தாயாக இருப்பது பிடித்திருக்கிறது. இதுதான் என் வாழ்வின் மிக மிக மிகச் சிறந்த காலகட்டம். மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன், மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நடந்ததில் சிறந்த விஷயம் இதுதான். இதை பென்ஜியுடன் இணைந்து அனுபவிப்பதில் எனக்கு அதிக அதிர்ஷ்டம். நாங்கள் சிறப்பாக நேரம் செலவிட்டு வருகிறோம். ஆர்வமாக இருக்கிறேன். என்னால் இதை நம்பவே முடியவில்லை.

மேலும் நான் ஏற்கனவே தனிமையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு மூன்று மாத குழந்தை இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே எனது வாழ்க்கை முற்றிலும் அமைதியாக, நிலையாக இருந்து வந்துள்ளது. ஆனால் முன்னர் என் நண்பர்களை அடிக்கடி வீட்டுக்கு வரவழைப்பேன். ஆனால் இப்போது யாரையும் பார்க்க முடிவதில்லை.

ஆனால் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. எனது வீடு என்ற வட்டத்துக்குள், அந்த வெப்பத்தில் எனது கணவருடன், சமைத்துக் கொண்டு வாழ்வது நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது உலகில் யாரும் வெளியே செல்ல முடியாத சூழல் என்பதையும் என்னால் நம்ப முடியவில்லை" என்று கேமரூன் டியாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்