காஞ்சனாவை நான் உருவாக்கியது இறைவனின் அருள்; திருநங்கைகளுக்காக ஒரு இல்லம்: லாரன்ஸ் தகவல்

விரைவில் tதிருநங்கைகளுக்காக அருமையான இல்லம் கட்டப்படும் என்று லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதற்காக மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனிடையே, ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் இன்றைய கொண்டாட்டம் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டனர்.

திருநங்கைகள் தினம் தொடர்பாக லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"இனிய திருநங்கைகள் தின நல்வாழ்த்துகள். உங்களின் அன்பையும் பாசத்தையும் உணர்ந்த உங்கள் லாரன்ஸின் அன்பான வாழ்த்துக்கள். உங்களுக்காக ஒரு காஞ்சனாவை நான் உருவாக்கியது. அந்த இறைவனின் அருள்.

அடுத்த திருநங்கையர் தினத்தில் நிச்சயம் ஊரோடு சேர்ந்து உங்களுக்கான அருமையான திருநங்கையர் இல்லத்தை உருவாக்கிட மீண்டும் இறைவனிடம் கேட்டிருக்கிறேன். நிச்சயம் நடக்கும். இத்தினத்தில் உலக மக்களை நீங்கள் மனதார ஆசிர்வதியுங்கள். அது மிக அவசியம்".

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE