சூர்யாவின் மெனக்கிடல், 4 காலகட்டங்களாக நடக்கும் கதை ஆகியவை 'சூரரைப் போற்று' மேக்கிங் வீடியோ மூலம் தெளிவாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. 2டி நிறுவனம் மற்றும் குனித் மோங்கா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வரவிருந்தது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளன. படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவாகாத காரணத்தால் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தள்ளிவைத்திருந்தது படக்குழு. நேற்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு என்பதால் 'சூரரைப் போற்று' படம் உருவான விதம் ஒளிபரப்பானது.
» கரோனா வைரஸ் பாதிப்பு: கலை இயக்குநரின் மனிதநேயம்
» நடிக்க வற்புறுத்திய ரஜினி மகள்: மறுப்பு தெரிவித்த மணிரத்னம்; காரணம் என்ன?
இதில் சூர்யா 19 வயது கெட்டப்பிற்காக மிகவும் மெனக்கிட்டு உடலைக் குறைத்து நடித்துள்ளது உறுதியானது. மேலும், இந்தப் படத்தின் கதை 4 காலகட்டத்தில் நடிப்பது போல் வடிவமைத்திருக்கிறார் சுதா கொங்கரா. 1977, 1983, 1990 மற்றும் 2000 ஆகிய காலகட்டத்தில் இதன் கதை நடக்கிறது.
மேலும், நாயகி அபர்ணா பாலமுரளி மலையாளியாக இருந்தாலும் இந்தப் படத்துக்காகச் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்தப் படத்தின் இடம்பெறும் விமானக் காட்சிகளுக்காக பெரும் பொருட்செலவில் அரங்குகள் அமைத்துக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் படம் உருவான விதத்தை நேற்று (ஏப்ரல் 14) மாலை 2டி நிறுவனத்தின் யூடியூப் பக்கத்திலும் படக்குழு வெளியிட்டது. இதற்கு இணையத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago