’மோகன் தாஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

விஷ்ணு விஷால் தயாரித்து, நடிக்கவுள்ள 'மோகன் தாஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பில் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தைத் தொடர்ந்து, பிரபு சாலமன் இயக்கத்தில் ராணாவுடன் நடித்துள்ள 'காடன்' வெளியாகவுள்ளது. கரோனா அச்சத்தால் இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், எழில் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜகஜால கில்லாடி' படமும் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்து, அப்படத்தைத் தயாரித்தும் வருகிறார் விஷ்ணு விஷால். இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கரோனா அச்சம் முடிந்தவுடன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால். 'மோகன் தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிக்கிறார். படத்தையும் அவரே தயாரிக்கிறார். இதனை 'களவு' படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார்.

நேற்று (ஏப்ரல் 11) இந்தப் படத்தின் அறிவிப்பை ஒரு டீஸராகவே வடிவமைத்து வெளியிட்டார். அதற்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். தற்போது, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

இந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ள புகைப்படம், தனது காதலில் ஜூவலா கட்டா எடுத்தது என்றும், அதை வைத்தே ஃபர்ஸ்ட் லுக்கை வடிவமைத்துவிட்டோம் என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ராஜகோபாலன், இசையமைப்பாளராக கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் பணிபுரிகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்