தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்க தனுஷ் மிகப்பெரிய பங்காற்றுவார்: ஷான் ரோல்டன் புகழாரம்

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்க தனுஷ் மிகப்பெரிய பங்காற்றுவார் என்று இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி தொலைக்காட்சிகளில் புதிய படங்கள் மட்டுமன்றி பல்வேறு ஹிட் படங்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இதனிடையே பொதுமக்களும் தங்களுக்குப் பிடித்த படத்தைப் பார்த்து, அதுகுறித்து தங்களுடைய கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள். அவ்வாறு 'பவர் பாண்டி’ படத்தைப் பார்த்துவிட்டு, அந்தப் படத்தின் இயக்குநர் தனுஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரது ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு நெட்டிசன் ஒருவர், "’பவர் பாண்டி’ படத்தை முதல் முறை திரையில் பார்த்தபோது ஏற்பட்ட அதே அழகிய ஆனந்தம்... மீண்டும் ஷான் ரோல்டன் மற்றும் இயக்குநர் தனுஷ் சார்" என்று தெரிவித்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பதிவில், "ஆண்டுதோறும் 1000 படங்கள் ரிலீஸ் ஆகலாம். ஆனால் அவை யாவும் 'பவர் பாண்டி' போல என்றும் சிறந்த படமாக முடியாது. இயக்குநர் தனுஷ் தமிழ் சினிமாவின் சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க மிகப்பெரிய பங்காற்றுவார். ஒரு மறுமலர்ச்சி மெதுவாக நடக்கும். ஆனால், நிச்சயமாக நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமான படம் 'பவர் பாண்டி'. இதில் ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்