அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஃபேமிலி’ குறும்படத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
கரோனா தொற்று அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் எந்தவொரு நிகழ்வுகளும், படப்பிடிப்புகளும், நடைபெறவில்லை. திரையுலகப் பிரபலங்கள் உட்பட அனைத்து மக்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
படப்பிடிப்புகள் இல்லாததால், தினசரி தொழிலாளர்கள் பலரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தந்தத் திரையுலகினர் உதவிகள் செய்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல்நலனைப் பேணுவது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தும் விதமாக ‘ஃபேமிலி’ என்ற குறும்படம் வெளியாகியுள்ளது.
இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் யூ-டியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் இப்படம் ட்ரெண்டாகியுள்ளது.
இந்நிலையில் ‘ஃபேமிலி’ குறும்படத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (07.04.20) அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘ஃபேமிலி’ குறும்படத்தை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி ‘உங்களால் விலகியிருக்கவும் முடியும், உங்களால் இணைந்தும் இருக்க முடியும். சரியான கருத்துக்களை கொண்ட சிறந்த வீடியோ இது. இதை பாருங்கள்’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago