'சென்னை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் இரண்டு மகள்களுக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கரீம் மொரானியின் இளைய மகள் ஷாஸா மொரானிக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மார்ச் முதல் வாரம் இலங்கையிலிருந்து திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு அறிகுறிகள் இல்லை. திங்களன்று அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்னொரு பக்கம் ஷாஸாவின் மூத்த சகோதரியும் நடிகையுமான ஸோவா மொரானி, மார்ச் இரண்டாம் வாரத்தின்போது ராஜஸ்தான் சென்று திரும்பியுள்ளார். அவருக்கும் இப்போது தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதை ஸோவாவும் உறுதி செய்துள்ளார்.
கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ஸோவா அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என்றும், இப்போதைக்கு அவரது குடும்பம், வீட்டுப் பணியாட்கள் என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை: திருமண மண்டபத்தை ஒப்படைக்கும் வைரமுத்து
» சமூக விலகல் குறித்த விழிப்புணர்வு: ரஜினி, அமிதாப் நடித்துள்ள ‘ஃபேமிலி’ குறும்படம்
முன்னதாக, இதைப் பற்றிப் பேசியுள்ள கரீம் மொரானி, "ஷாஸாவுக்கு அறிகுறிகள் இல்லை. ஆனால் அவருக்குத் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஸோவாவுக்கு அறிகுறிகள் இருந்தது. அப்போது பரிசோதனை செய்யும்போது அவருக்குத் தொற்று இல்லை. இருவருமே இப்போது தனிமையில், சிகிச்சையில் உள்ளனர்" என்று கூறினார்.
திங்கள் மாலை வரை இந்தியாவில் கோவிட்-19 தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 4,421. 111 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago