விக்ரம் பிறந்த நாளுக்கு 'கோப்ரா' டீஸர் வெளியாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து பதிலளித்துள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'கோப்ரா'. பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சம் நீங்கியவுடன் தொடங்கும் எனத் தெரிகிறது. இதனிடையே ஏப்ரல் 17-ம் தேதி விக்ரம் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்.
இந்தச் சமயத்தில் 'கோப்ரா' படத்தின் டீஸர் வெளியாகும் என்று விக்ரம் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்நோக்கியிருந்தார்கள். இதைக் கேள்வியாக விக்ரம் ரசிகர் ஒருவர் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, "விக்ரம் அண்ணா பிறந்த நாளைக்கு 'கோப்ரா' டீஸர் ரிலீஸ் பண்ணுங்க அண்ணா.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கேட்டார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் அஜய் ஞானமுத்து, "அதற்கு வாய்ப்பில்லை. அனைத்து ஸ்டுடியோக்களும் மூடியுள்ளன. அதற்கு நீண்ட நாட்களாகும்" என்று தெரிவித்துள்ளார்.
'கோப்ரா' படம் மட்டுமல்லாது, பல்வேறு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago