'ராதே' படக்குழுவினரின் வங்கிக்கணக்கில் பணம் போட்ட சல்மான்

By ஐஏஎன்எஸ்

தான் நடித்து வரும் 'ராதே' திரைப்படத்தின் படக்குழுவில் இருக்கும் தினக்கூலிப் பணியாளர்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பி உதவி செய்துள்ளார் நடிகர் சல்மான் கான்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொழுதுபோக்குத் துறையைச் சார்ந்த அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்தாகியுள்ளன. எனவே இதைச் சார்ந்து வாழும் தினக்கூலிப் பணியாளர்கள் லட்சக்கணக்கானோர் வருமானம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

சல்மான் கான் நடித்து வரும் 'ராதே: யுவர் மோஸ்ட் வான்டட் பாய்' படத்தின் படப்பிடிப்பும் ரத்தாகியுள்ளதால் படக்குழுவில் இருக்கும் தினக்கூலிப் பணியாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மார்ச் 26-லிருந்து ஏப்ரல் 2 வரை இந்தப் படக்குழுவில் வேலை செய்ய இருந்தவர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் படத்தின் நாயகன் சல்மான் கான் பணம் போட்டுள்ளார்.

இந்தச் செய்தியை உறுதி செய்த ஒப்பனைக் கலைஞர் சுபாஷ் கபூர், "என்ன ஒரு சிறந்த விஷயம். சல்மானுக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான காலகட்டம் இது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, சல்மான் திரைத்துறையைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு உதவி செய்வதாகக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்தே இந்தச் சம்பவமும் நடந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்