வெற்றிமாறன் - சூரி படத்தின் கதைக்களத்தில் மாற்றம்?

By செய்திப்பிரிவு

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள படத்தின் கதைக்களத்தை மாற்றி அமைக்கும் வேலை தற்போது நடைபெற்று வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அசுரன்'. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே சூரியை நாயகனாக வைத்து படம் இயக்க ஒப்பந்தமானார் வெற்றிமாறன். இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க முன்வந்தார்.

முதலில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ஒரு கவிதையை மையமாக வைத்து, இந்தப் படத்தை உருவாக்கத் திட்டமிட்டனர். அத்திட்டம் கைவிடப்பட்டு, மீரான் மைதீன் எழுதிய ’அஜ்னபி’ என்ற நாவலை மையமாகக் கொண்ட கதைக்களத்தை உருவாக்கும் வேலையில் இறங்கினர்.

மேலும், அப்படத்தை ஓமன், கத்தார், சவுதி ஆகிய இடங்களில் படமாக்கத் திட்டமிட்டனர். படப்பிடிப்புக்குப் புறப்படலாம் என்கிற நிலையில் கரோனா அச்சுறுத்தல் வீரியமானதால் அந்த முயற்சியையும் கைவிட்டனர். மேலும் இந்தியாவிலேயே படப்பிடிப்பை நடத்தும் வகையில் ஒரு கதைக்களத்தை உருவாக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவும் நாவலை அடிப்படையாகக் கொண்டதா என்பது விரைவில் தெரியவரும்.

சூரி படத்தை முடித்தவுடன்தான், சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படம் 'வாடிவாசல்' நாவலைத் தழுவி எடுக்கப்படும் படமாகும். 'அசுரன்' படத்தைத் தயாரித்த தாணுவே, இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்