1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடை அளித்த அர்னால்ட்

By ஏஎன்ஐ

பிரபல ஹாலிவுட் நடிகரும் கலிஃபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வாஸ்னேகர், கோவிட்-19 தொற்றைக் கையாளும் மருத்துவமனைகளில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளார்.

இது தொடர்பால அர்னால்ட் தன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கும் வீடியோவில், பொருட்கள் வந்துவிட்டதா என்பதை உறுதி செய்யத் தானே நேரடியாக வந்துள்ளதாகக் குறிப்பிட்டு, மகிழ்ச்சியுடன் ஒரு பெட்டியைத் திறந்து அதில் என் 95 முகக் கவசங்கள் இருக்கிறதா என்று பரிசோதிக்கிறார்.

தொடர்ந்து கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் பதிவுகளை அர்னால்ட் பகிர்ந்து வருகிறார். சமூக விலகல் குறித்தும் அறிவுறுத்தி வருகிறார். தன் வீட்டுக்குப் பின்னால் தான் உடற்பயிற்சி செய்யும் சில வீடியோக்களையும் பதிவேற்றியுள்ளார்.

முன்னதாக, இன்ஸ்டாகிராமில், மருத்துவ ஊழியர்களுக்காகத் தான் ஒரு மில்லியன் டாலர்களை தானம் அளித்துள்ளதாகப் பகிர்ந்திருந்தார்.

அதில், "மருத்துவமனைகளில் களத்தில் போராடும் நமது நிஜமான ஆக்‌ஷன் ஹீரோக்களைப் பாதுகாக்க எளிய வழி இது. இதில் பங்கெடுப்பதில் பெருமை கொள்கிறேன். சூழல் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று வீட்டில் உட்கார்ந்துகொண்டு புகார் அளிப்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கை இல்லை" என்று அர்னால்ட் குறிப்பிட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE