சுகுமார் - அல்லு அர்ஜுன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று வைரலானதற்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஜெயராம், தபு, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. இந்தப் படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அதற்கு ஏற்றார் போல் படமும் அமைந்ததால், அல்லு அர்ஜுன் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சுகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் அல்லு அர்ஜுன். இந்தக் கதாபாத்திரத்துக்காகத் தன்னை தயார்படுத்தி வருகிறார். மேலும், கரோனா முன்னெச்சரிக்கையால் படப்பிடிப்பும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் வடிவமைப்பு இணையத்தில் பெரும் வைரலானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தப் படத்தைத் தயாரித்து வரும் மைத்ரி பிலிம் மேக்கர்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பதிவில் "அது ரசிகர் உருவாக்கியது. எங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் நிஜமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் வரை, அவை வந்துக் கொண்டுதான் இருக்கும்" என்று தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago