'பஹீரா' படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 5 நாயகிகள் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
'தபங் 3' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் 'ராதே' படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. அந்தப் படத்தின் பணிகளுக்கு இடையே, தமிழில் தனது நடிப்பில் உருவாகும் 'பஹீரா' படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய சில நாட்களிலேயே, கரோனா முன்னெச்சரிக்கையால் நிறுத்தப்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு நாயகியாக அமைரா நடித்து வருகிறார்.
தற்போது இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு 5 நாயகிகள் என்பது தெரியவந்துள்ளது. இதில் அமைராவைத் தொடர்ந்து காயத்ரியும் நடித்து வருவது உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 3 நாயகிகளையும் புதுமுகங்களாக நடிக்க வைக்கலாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
» நலிந்த கலைஞர்களுக்கு உதவி: அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நாசர் கடிதம்
» அமைதியாக உதவி செய்பவர்களைப் பற்றிய ஊகம் முட்டாள்தனமானது: இயக்குநர் தேவா கட்டா
இந்தப் படத்தில் கின்னஸ் பக்ரூவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்கள் கழித்து அவர் தமிழில் நடிக்கும் படம் 'பஹீரா' என்பது குறிப்பிடத்தக்கது. பரதன் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
42 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago