என்னுடைய வாழ்க்கையின் நீதிபதியாக இருப்பதை நிறுத்துங்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் மகேஸ்வரி சாடியுள்ளார்.
சன் டிவி மூலம் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் மகேஸ்வரி. அதனைத் தொடர்ந்து கலைஞர் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். சில படங்களிலும் குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து திருமணமாகி, குழந்தைக்குத் தாயானார். அதற்குப் பிறகு நடிப்பிலிருந்தும், தொகுப்பாளர் பணியிலிருந்தும் சில காலம் விலகியிருந்தார். தற்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பும் எண்ணம் மகேஸ்வரிக்கு வந்துள்ளது.
இதனால் தொடர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து படங்கள் வெளியிட்டார் மகேஸ்வரி. இவை ட்விட்டர் பக்கத்தில் வைரலாகின. இந்தப் புகைப்படங்களைத் தொடர்ந்து மகேஸ்வரி ஆர்மி என்ற பெயரில் சிலரால் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது.
» பெண்கள் மேடையேறி வெளிச்சம் பெறத் தொடங்கியுள்ளனர்: மனிஷா கொய்ராலா
» கரோனா வைரஸ் பாதிப்பு: முதல்வர் நிவாரண நிதிக்கு சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் நிதியுதவி
இந்தப் புகைப்படங்களை வைத்து, "சினிமா வாய்ப்புகளுக்கு மகேஸ்வரி வலை வீசுகிறார். அதனால்தான் இப்படி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்" என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக மகேஸ்வரி தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், "வாவ். ஒருவரைப் பற்றிய முன் கணிப்பு இவ்வளவு தூரம் செல்லுமா? இது முழுக்க முழுக்க என்னுடைய தேடலுக்கானது. ஆனால், எனது வாய்ப்புகளுக்காக நான் செய்து கொண்டிருப்பதில் தவறில்லை. என்னுடைய வாழ்க்கையின் நீதிபதியாக இருப்பதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago