7 ஆம் அறிவு மீம்ஸ்: நிறுத்தச் சொல்லி ஸ்ருதிஹாசன் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தன்னைப் பற்றி மீம்ஸ் மற்றும் கேள்விகள் எழுந்து வருவதால், அதை நிறுத்துமாறு ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன், ஜானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '7 ஆம் அறிவு'. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

வெளிநாட்டிலிருந்து வரும் வில்லன் ஒருவன் நாய் மூலமாக வைரஸை பரப்ப, அதை எதிர்கொள்ள ஸ்ருதிஹாசன் பழங்காலத்து போதிதர்மன் என்ற துறவியை உயிர் பிழைக்க வைப்பார். அதாவது, வம்சா வழியில் வந்தவருக்கு போதிதர்மரின் திறன்களைக் கொடுத்து, போதி தர்மருக்கு இணையாக மாற்றுவார். . இது தான் '7-ம் அறிவு' படத்தின் கதையாகும்.

தற்போது இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இதுவரை 41 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதனை முன்வைத்து ஸ்ருதிஹாசன் கிண்டல் செய்யும் விதமாக மீம்ஸ்களையும், அவருடைய சமூகவலைத்தளத்தைக் குறிப்பிட்டு கேள்வியையும் எழுப்பி வந்தனர். என்னவென்றால் போதி தர்மனை மீண்டும் உயிர்ப்பிக்க வைத்து எங்களை எல்லாம் காப்பாற்றுமாறு தெரிவித்தார்கள்.

இது தொடர்பான மீம்ஸ்களும்,. கேள்விகளும் அதிகரிக்கவே ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில், "நிறுத்துங்கள்.. ப்ளீஸ்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது தன்னைத் தானே தனிமைப்படுத்துக் கொண்டு, நண்பர்களுடன் வீடியோ கால் மற்றும் இன்ஸ்டாகிராமில் சாட்டிங் எனப் பொழுதைக் கழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்