'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் ராம் சரண் கதாபாத்திரத்தின் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

ராஜமௌலி இயக்கி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் ராம் சரண் நடித்துள்ள கதாபாத்திரத்தின் லுக்கை அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. கரோனா முன்னெச்சரிக்கையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஓலிவா மோரிஸ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

இன்று (மார்ச் 27) ராம் சரண் பிறந்த நாள் என்பதால், இந்தப் படத்திலிருந்து அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ராம ராஜு என்ற பெயரில் இந்தப் படத்தில் நடித்துள்ளார் ராம் சரண். பீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜுனியர் என்.டி.ஆர்.

இருவரும் அண்ணன் - தம்பியாக நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்தக் கதாபாத்திர அறிமுக வீடியோவில், ராம் சரண் கதாபாத்திரத்துக்கு ஜுனியர் என்.டி.ஆர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இந்த வீடியோ அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் ராம் சரண் லுக்கை போஸ்டராகவும் வெளியிட்டுள்ளது 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு. 'பாகுபலி' இயக்குநரின் அடுத்த படம் என்பதால், இந்த போஸ்டர் மற்றும் வீடியோ இரண்டிற்குமே இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE