கரோனா வைரஸ் கிருமியை அனுப்பக் கடவுளிடம் வேண்டியவர் யார்? - ராம் கோபால் வர்மா கிண்டல்

கரோனா வைரஸ் கிருமியை அனுப்பக் கடவுளிடம் வேண்டியவர் யார் என்பது குறித்து ராம் கோபால் வர்மா கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்திருப்பதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். அதையும் மீறி வெளியே சென்ற பொதுமக்களையும், காவல்துறையினர் வீட்டில் இருக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

எப்போதுமே சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தற்போது இந்த கரோனா வைரஸ் கிருமி தொடர்பாகக் கிண்டலாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"ஏதோ ஒரு மனைவிதான் இந்த வைரஸ் கிருமியை அனுப்பும்படி கடவுளிடம் வேண்டியிருக்கிறார் என நான் சந்தேகிக்கிறேன். ஏனென்றால் விளையாட்டுப் போட்டிகள் ரத்து, பார்கள் மூடல், நண்பர்களுடன் கூடுவது ரத்து, அலுவலக வேலை இருக்கிறது என பொய் சொல்ல முடியாது, முக்கியமாக மனைவியுடன் மட்டுமே நேரத்தைச் செலவிட வேண்டும்".

இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE