புதிய எபிஸோடுகள் இல்லாததால் திங்கள் முதல் சீரியல்கள் மறு ஒளிபரப்பு: குழப்பமான நெருக்கடிக்குள்ளான சேனல்கள்

By செய்திப்பிரிவு

வரும் திங்கள்கிழமை முதல் விஜய் மற்றும் ஜீ தமிழ் சேனல்கள் சீரியல் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்ய தயாராகி வருகின்றன. கரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஊரடங்கு ஏப்ரல் 14 வரை நீண்டுள்ளதால் படப்பிடிப்புகளை ரத்துசெய்த சின்னத்திரை தொழிலாளர்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சி போன்ற சேனல் தரப்பினரும் தாங்கள் இதற்கு முன்பு எடுத்து வைத்திருந்த சீரியல் அத்தியாயங்கள் இந்த வாரத்தோடு நிறைவுபெறுவதால் வரும் திங்கள் முதல் ஹைலைட் என்று மக்கள் இதற்கு முன்பு கொண்டாடிய சிறந்த தொடர் அத்தியாயங்களை மறு ஒளிபரப்பாக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன.

வெர்டிக்கல் பஸ்!

ஜீ தமிழ் உள்ளிட்ட சில தொலைக்காட்சிகள் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் தொடர்களை இணைத்து மொத்தமாக ‘வெர்டிக் கல் பஸ்’ என்ற பெயரில் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாக்கி வந்தன. தற்போது புதிய எபிஸோடுகள் இல்லாததால் அதையே வாரம் முழுக்க ஒளிபரப்பும் நிலைக்கு வந்துள்ளன. தற்போது அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு சின்னத்திரைத் தொடரின் ஆரம்பத்தில் பாடல்களை 4 நிமிடங்கள் ஒளிபரப்பாக்கி வந்த சேனல்கள் கடந்த சில ஆண்டுகளாக அதை செய்யாமல் இருந்து வந்தன. ஆனால், தற்போதைய நேரத் தேவை காரணமாக அதையெல்லாம் திரும்ப ஒளிபரப்பாக்கி வந்தாலும், கையிருப்பில் வேறு எபிசோடுகள் இல்லாததால் சேனல்கள் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன.

விஜய், ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல் களில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி, பாண்டி யன் ஸ்டோர்ஸ், மவுனராகம், சத்யா உள்ளிட்ட தொடர்கள் அடுத்தடுத்த வாரங்களுக்கு ஒளிபரப்பு செய்வதற்காக, முந்தைய சிறந்த எபிஸோடுகளைத் தயாராக வைத்துள்ளன.

ஏப்ரல் 14-க்குப் பிறகு…

ஏப்ரல் 14- க்குப் பிறகு நிலைமை சரியாகி, மீண்டும் சீரியல் பார்வையாளர்கள் 2 மாத இடைவெளிக்குப் பிறகு சேனல் பக்கம் வருவார்கள். அப்போது பார்வையாளர்கள் ஒவ்வொரு சீரியலையும் மறந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஆகவே, அதற்கு தகுந்தாற் போல காட்சிகளையும், சீரியல் கதைகளையும் மாற்ற வேண்டிய சூழலும் சேனல்களுக்கு உரு வாகியுள்ளது. இவற்றையெல்லாம் விட இந்தப் படப்பிடிப்புகள் இல்லாத இந்த நெருக்கடியான நேரத்தில் சின்னத்திரை தொழிலாளர்களின் நிலையும், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க திணறும் சீரியல் தயாரிப்பாளர்களின் நிலையும் வேதனைகொள்ள வைக்கிறது. சின்னத்திரை தொழிலாளர்களின் கவலை சூழ்ந்த இந்த நிலைமைதான் தற்போதைய தொலைக்காட்சி வரலாற்றின் ஆகப்பெரும் கவலையாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE