நமது மாநிலத்துக்காகச் சிறந்த பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள்: அமைச்சரைப் பாராட்டிய ஜெயம் ரவி

By செய்திப்பிரிவு

நமது மாநிலத்துக்காகச் சிறந்த பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கரைப் பாராட்டியுள்ளார் ஜெயம் ரவி.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனை பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய ட்விட்டர் தளத்தில் கூறி வருகிறார்கள்.

கரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகளுக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக ஜெயம் ரவி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது சென்னை, அடுத்த 2 வாரங்களுக்கு சமூகத்திடமிருந்து விலகியிருத்தலைத் தொடர்வோம். நம்மை வாழ வைக்க தங்கள் உயிரை பணையம் வைக்கும் உண்மை போராளிகளைப் பெருமைப்படுத்துவோம். உங்களுக்கு சல்யூட்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் டிவிட்டர் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. கோவிட் 19 வைரஸ் குறித்து அவர் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விழிப்புணர்வுக்கும் சிறப்பான பணிக்கும் பாராட்டுகள். நன்றி சார். நமது மாநிலத்துக்காகச் சிறந்த பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள்”

இவ்வாறு ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

16 mins ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்