‘நாங்கள் நலமுடன் இருக்கிறோம்.. இதுவும் கடந்து போகும்’- டாம் ஹாங்க்ஸ் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது குறித்து ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் வைரஸால் இதுவரை 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாக பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தானும் தனது மனைவியும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்திருந்தார். அவருக்காக உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் டாம் ஹாங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து பதிவுட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘ஹலோ நண்பர்களே. எங்கள் முதல் அறிகுறியின் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் நலமாக இருக்கிறோம். இப்படி தனிமையில் இருப்பது நமக்கு சொல்வது இதைத்தான்: நீங்கள் யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமிருந்தும் பெறவும் வேண்டாம். இதுதான் பொது அறிவு. இல்லையா? இன்னும் சிறிது காலம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். ஆனால் நாம் ஒருவரை ஒருவர் பாதுகாத்து, உதவி செய்து, சில வசதிகளை விட்டுக் கொடுத்தால், இதுவும் கடந்து போகும். இதற்கு தீர்வு காணலாம்.’

இவ்வாறு டாம் ஹாங்க்ஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE