படங்கள் என்றும் வாழும்; உங்களை மறக்க முடியாது விசு சார்: விக்னேஷ் சிவன் புகழாஞ்சலி

By செய்திப்பிரிவு

உங்களது படங்கள் என்றும் வாழும், மறக்க முடியாது விசு சார் என்று விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவரும், பல படங்களுக்கு கதாசிரியராக பணிபுரிந்த விசு இன்று (மார்ச் 22) மாலை காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

விசு மறைவு தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்த ஆளுமை நம்மை விட்டுச் சென்று விட்டார். அற்புதமான எழுத்தாளர், அட்டகாசமான இயக்குநர், தனித்துவமான நடிகர், தன்னுடைய சென்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை வசனங்கள் மூலமாக குடும்பங்களைத் தொட்டவர் இன்றும் இவருடைய படங்கள் பேசும். விசு சாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த ஆளுமையின் 'அரட்டை அரங்கம்', 'தில்லு முல்லு', 'சம்சாரம் அது மின்சாரம்', 'சிதம்பர ரகசியம்', 'பெண்மணி அவள் கண்மணி', 'திருமதி ஒரு வெகுமதி', 'வரவு நல்ல உறவு', 'மணல் கயிறு' உள்ளிட்ட பல முக்கிய படங்கள் என்றென்றும் வாழும். உங்களை மறக்க முடியாது சார்"

இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்