லாரன்ஸ் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.
அக்ஷய் குமார், கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் இந்திப் படமான 'லட்சுமி பாம்' படத்தை இயக்கி வருகிறார் லாரன்ஸ். அவர் இந்தியில் இயக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. தமிழ் பெரும் வரவேற்பைப் பெற்ற 'காஞ்சனா' படத்தின் ரீமேக்காகும்.
இதனைத் தொடர்ந்து தமிழில் தான் இயக்கவுள்ள படத்துக்குத் தயாராகி வரும் வேளையில், நாயகனாகவும் சில படங்களில் நடிக்கவுள்ளார். அதில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் 'ரங்கஸ்தலம்' தெலுங்கும் படத்தின் தமிழ் ரீமேக்கும் ஒன்று. அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கும் த்ரில்லர் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். இதில் லாரன்ஸுக்கு நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
தற்போது லாரன்ஸ் - ப்ரியா பவானி சங்கர் ஆகியோருடன் நடிக்கவுள்ளார்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மே மாதம் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago