பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக துஷாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'காலா' படத்துக்குப் பிறகு பா.இரஞ்சித் இயக்கவிருந்த இந்திப் படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மீண்டும் தனது அடுத்த தமிழ்ப் படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார் பா.இரஞ்சித். இதில் ஆர்யா நாயகனாக நடிக்கவுள்ளார்.
வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய இந்தக் கதையில் நடிக்க ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு நாயகியாக நடிக்கவுள்ளதாகப் பலருடைய பெயர்கள் அடிபட்டன. இறுதியாக, 'போதை ஏறி புத்தி மாதிரி' படத்தின் மூலம் அறிமுகமான துஷாரா நாயகியாக நடித்து வருவது உறுதியாகியுள்ளது. ஜனவரி மாதத்திலிருந்தே இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
ஆர்யாவுடன் கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு 'சல்பேட்டா' என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழுவினர் இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago