கலங்கடிக்க வைக்கும் கதை- ‘ஸ்பைடர்மேன் 3’ குறித்து முதன்முறையாக வாய்திறந்த டாம் ஹாலண்ட்

By செய்திப்பிரிவு

‘ஸ்பைடர்மேன் 3’ படம் குறித்து டாம் ஹாலண்ட் முதன் முறையாக வாய் திறந்துள்ளார்.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முக்கிய கதாபாத்திரம் ஸ்பைடர்மேன். 2002ஆம் ஆண்டு சாம் ரெய்மியால் புத்துயிர் கொடுக்கப்பட்டிருந்தாலும் மார்வெல் படங்களின் வரவால் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தின் புகழ் உலகமெங்கும் பரவியது.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில்தான் முதன்முதலில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு ‘ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்’, ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ ஆகியவை ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்துக்கென தனிப் படங்களாக வெளியியாயின.

இப்படங்கள் பெற்ற மாபெரும் வரவேற்பால் இதன் அடுத்த பாகத்தை மார்வெல் மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தை பற்றி இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில் ஸ்பைடர்மேனாக நடித்து வரும் டாம் ஹாலண்ட் இப்படம் குறித்து முதன்முறையாக வாய் திறந்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்குஅளித்த பேட்டியில் டாம் ஹாலண்ட் கூறியிருப்பதாவது:

‘இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இது மிகவும் கலங்கடிக்க வைக்கும் ஒரு கதை. ஸ்பைடர்மேன் 3 படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் அட்லாண்டாவில் தொடங்கவுள்ளது. மற்ற மார்வெல் படங்களில் நான் நடிப்பதை பொறுத்தவரை, அவர்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. முந்தைய படங்களில் மேரி ஜேனாக நடித்த ஜிண்டேயா இந்த படத்திலும் இருக்கிறார். அவருக்கும் பீட்டர் பார்க்கருக்கும் இருக்கும் உறவுமுறை இப்படத்தில் எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து எனக்கு நிச்சயமாக தெரியவில்லை’

இவ்வாறு டாம் ஹாலண்ட் கூறியுள்ளார்.

ஸ்பைடர்மேன் 3 2021 ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

19 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்