விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவம்: விஜய் சேதுபதி பகிர்வு

By செய்திப்பிரிவு

விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவத்தை 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொண்டார் விஜய் சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் வெளியீட்டுக்கு தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்று (பிப்ரவரி 15) இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கு பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என யாருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை. 'மாஸ்டர்' படக்குழுவினர் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:

“விஜய் சாருடைய படங்களில் நடிக்க எவ்வளவு பேர் ஆசைப்படுவார்கள் என தெரியும். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. இந்த ஆச்சரியம் எனக்குச் சாதாரணமாகத் தான் இருந்தது. படத்தின் போஸ்டரில் விஜய் சார் பெயருடன் சேர்ந்து என் பெயரும் இருக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். அவருடைய இடத்துக்கு அவர் அதைச் செய்தர் அதில் மகிழ்ச்சி.

ஒரு நாள் அவரிடம் ஏன் சார் பேசவே மாட்டிக்கிறீர்கள் எனக் கேட்டேன். நான் யார் என்ன சொன்னாலும் கேட்பேன் என்று சொன்னார். அதுவொரு நல்ல பாடம். முதலில் நானும், அவரும் இருக்கும் போட்டோ ஷுட் நடந்தது. அவருடைய படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால், அவருடன் பணிபுரியும் அனுபவம் எப்படியிருக்கும் என தெரியவில்லை. அதற்கு முன்னோட்டமாக இந்த போட்டோ ஷுட் இருக்கும் என நம்பித்தான் சென்றேன். பெரிதாகப் பேசவில்லை. ஏனென்றால், நான் ரொம்ப கூச்ச சுபாவம் உடையவன். அப்போது அவர் என்னுடன் பேசிய பழகிய விதம் ரொம்ப இலகுவாக இருந்தது.

எங்களுக்கு இடையேயான முக்கியமான காட்சிகள் படப்பிடிப்பின் போது, அவரிடம் எப்படிச் சொல்வது எனத் தயக்கம் இருந்தது. உடனே 'ப்ரோ.. உங்களுக்கு என்ன தோணுதோ ப்ரீயாக பண்ணுங்கள்'” என்றார். நமது இடத்துக்குள் வருபவர்களை இலகுவாக்குவதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த பெரிய மனசு விஜய் சாரிடம் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையுமே நான் எப்படிப் பார்க்கிறேன், என்னுடன் நடிப்பவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கவனிப்பேன். அப்படி இந்தப் படத்தில் நான் என்ன நினைத்துக் கொண்டு போனாலுமே, அவர் ஒவ்வொரு காட்சியிலுமே ஒரு ஆச்சரியம் வைத்திருந்தார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விஜய் சாருடன் பணிபுரிந்த அனுபவம் ரொம்பவே அழகானது.

ஒவ்வொரு காட்சிக்கும் அவரது சிறு சிறு ரியாக்‌ஷன் ரொம்பவே பிடிக்கும். அவருடன் நடித்தது ரொம்பவே அற்புதமான, அழகான அனுபவம். அது அவருக்கு முத்தம் கொடுக்கும் போதே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். விஜய் சாரிடம் என்ன கற்றுக் கொண்டேன் எனக் கேட்டீர்கள் என்றால், ரொம்ப அற்புதமான மனிதர். ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள். சூப்பராக அழகாக இருக்கிறீர்கள்.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்