தனது திரையுலக அனுபவங்கள் மூலம் குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார் நடிகை கனிகா.
தமிழ், தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நாயகியாக நடித்தவர் கனிகா. அதுமட்டுமன்றி நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சிகளுக்கு நடுவர் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டுள்ளார். தமிழில் 'பைவ் ஸ்டார்', 'வரலாறு' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே தன்னுடைய திரையுலக அனுபவங்களை வைத்து இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் கனிகா. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறும்படம் இயக்கி வருவது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கனிகா கூறியிருப்பதாவது:
''முதல் முறையாக கேமராவுக்குப் பின்னால். சினிமா என்பது ஒரு பெரிய கடல் என்பதை நான் எப்போதுமே உணர்ந்துள்ளேன். அதில் கலைஞனுக்குக் கற்றுக்கொள்ளவும் பயணிக்கவும் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. என்னில் இருக்கும் உணர்வுள்ள, கற்றுக்கொள்ள ஆசைப்படும் எண்ணம் முதல் முறையாக இயக்கம் செய்யப் பணித்திருக்கிறது. என் இதயத்துக்கு நெருக்கமான ஒரு கதையுடன் குறும்படத்துக்குத் தயாராக இருங்கள். போஸ்ட் புரொக்டஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன''.
இவ்வாறு கனிகா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago