விஷால் இயக்கத்தில் உருவாகவுள்ள 'துப்பறிவாளன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
'சக்ரா' படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, லண்டனில் 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் விஷால். தனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் புதுமுகம் அஷ்யா நாயகியாக நடித்து வந்தார். ரகுமான், கெளதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்கள். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, சென்னை திரும்பியது படக்குழு. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்
படத்தின் பொருட்செலவு, படப்பிடிப்பு சமயத்தில் நடந்து கொண்ட விதம் உள்ளிட்டவற்றை வைத்து விஷால் - மிஷ்கின் இருவருக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கின் விலகவே, விஷாலே அந்தப் பொறுப்பை ஏற்றார்.
» இரையாகிவிடாதீர்கள் தயாரிப்பாளர்களே: மிஷ்கினை மறைமுகமாகச் சாடி விஷால் அறிக்கை
» 'துப்பறிவாளன் 2' சர்ச்சை: விஷாலுக்கு மிஷ்கின் விதித்த 15 நிபந்தனைகள்; முழுமையான பட்டியல்
இதரக் காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. விஷால் இயக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, தான் இயக்கவுள்ளதை உறுதி செய்தார் விஷால்.
விஷால் இயக்குநராக மாறியுள்ளதற்கு அவரது திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நாயகனாக நடிப்பதற்கு முன்னதாக அர்ஜுனிடம் உதவி இயக்குநராக விஷால் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
48 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago