ஆமிர் கானுடன் நடிக்கவுள்ள கதாபாத்திரத்துக்காக உடல் எடையைக் குறைக்கவுள்ளார் விஜய் சேதுபதி.
டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்றது.
தற்போது 'லால் சிங் சட்டா' என்ற பெயரில் 'ஃபாரஸ்ட் கம்ப்' இந்தி ரீமேக் தயாராகி வருகிறது. அட்வாயித் சந்தன் இயக்கி வரும் இந்தப் படத்தில் கரீனா கபூர், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் ஆமிர் கானுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை.
இதனிடையே, இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக உடல் எடையைக் குறைக்கவுள்ளார் விஜய் சேதுபதி. ஆமிர் கானும் உடல் எடையைக் குறைத்து நடித்து வருவதால், அவருக்குத் தகுந்தாற் போன்று தனது உடலமைப்பை மாற்ற முடிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. இவரது காட்சிகளின் படப்பிடிப்பு எப்போது என்பதை படக்குழு இன்னும் தெரிவிக்கவில்லை.
தமிழில் விஜய்யுடன் 'மாஸ்டர்', 'லாபம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'மாமனிதன்', 'கடைசி விவசாயி' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago