பொது வாழ்க்கையில் அன்பழகன் சம்பாதித்தது மதிப்பும் மரியாதையும் மட்டுமே: ரஜினி புகழாஞ்சலி

By செய்திப்பிரிவு

பொது வாழ்க்கையில் க.அன்பழகன் சம்பாதித்தது மதிப்பும் மரியாதையும் மட்டுமே என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, இன்று (பிப்ரவரி 7) அதிகாலை 1 மணியளவில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 98.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள க.அன்பழகனின் வீட்டில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் பிரபலங்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். க.அன்பழகனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் இயக்குநர் முத்துராமனும் வந்திருந்தார்.

க.அன்பழகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினி பேசும்போது, ''மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பேராசிரியருடைய மறைவு மிகப்பெரிய இழப்பு. 60 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்க்கையிலிருந்து அவர் சம்பாதித்தது மதிப்பும் மரியாதையும் மட்டுமே. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், என்னுடைய அருமை நண்பர் ஸ்டாலினுக்கும் திமுகவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

26 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்