மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர் க.அன்பழகன்: ராதிகா புகழாஞ்சலி

By செய்திப்பிரிவு

மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர் க.அன்பழகன் என்று தனது ட்விட்டர் பதிவில் ராதிகா தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே வயோதிகம் காரணமாகத் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன். சில நாட்களுக்கு முன்னதாக அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் பிப்ரவரி 24-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர கண்காணிப்புப் பிரிவிலிருந்தவரின் உயிர், இன்று அதிகாலை 1 மணியளவில் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் பலரும் அன்பழகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மேலும், பலர் அவரது குடும்பத்தினருக்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு, ராதிகா தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

''க.அன்பழகனின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள். 9 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மிச்சம் இருக்கும் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர். கருணாநிதி என்கிற இன்னொரு தொலைநோக்குப் பார்வை கொண்டவருடன் கை கோத்து திமுக மற்றும் அதன் வளர்ச்சிக்கு நிறையப் பங்காற்றியவர்''.

இவ்வாறு ராதிகா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்