பா.இரஞ்சித் படத்துக்காக 7 மாதங்களில் ஆர்யா அடைந்துள்ள மாற்றம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
'காலா' படத்துக்குப் பிறகு, தொடங்கப்பட்ட இந்திப் படத்தின் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தமிழ்ப் படமொன்றை இயக்கி வருகிறார் பா.இரஞ்சித். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இப்படத்துக்கு 'சல்பேட்டா' என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்தப் படத்தில் ஆர்யா, கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இதில் பாக்ஸராக நடிக்கிறார் ஆர்யா.
இதற்காக மிகவும் மெனக்கிடலில் ஈடுபட்டு தனது உடலமைப்பை மாற்றியுள்ளார் ஆர்யா. எப்போதுமே சைக்கிளிங், ஜிம் என இருக்கும் அவர், இந்தப் படத்துக்காகத் தனது உடலை மிகவும் கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதனிடையே, 7 மாதங்களுக்கு முன்பு எப்படியிருந்தேன் இப்போது எப்படியிருக்கிறேன் என்பதை ஆர்யா தனது ட்விட்டர் தளத்தில் புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களுடன், "7 மாதங்கள் ஜிம்மில் பயிற்சி செய்ததன், பாக்ஸிங் செய்ததன் தாக்கம் இது. எனது பயிற்சியாளர்கள் ஜெய், ஜான்சன், சந்தோஷ், திரு, பிரசாத், ஆகியோர் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. இவர்கள் எல்லோரும் எனக்குத் தோள் கொடுத்தார்கள்" என்று பதிவிட்டுள்ளார் ஆர்யா.
பா.இரஞ்சித் படத்துடன், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் 'அரண்மனை 3' படத்திலும் ஆர்யா கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago