உலகப் புகழ் பெற்ற திரைப்படமான 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் சாமி. இந்நிலையில் ரீமேக் செய்யப்பட்ட படத்தைப் பார்த்த பிறகே இசையமைக்க ஒப்புக்கொண்டார் இளையராஜா.
1997-ம் ஆண்டு ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியான படம் 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்'. உலக அளவில் மிகவும் பிரபலமான இந்தப் படம் பல்வேறு உயரிய விருதுகளை வென்றுள்ளது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி இயக்கியுள்ளார் சாமி.
'அக்கா குருவி' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
» 'மாஸ்டர்' படக்குழுவுக்குப் புகழாரம் சூட்டிய விஜே ரம்யா
» பாரதியாரின் வரிகளுடன் கரோனோ வைரஸை ஒப்பிட்ட அருண்ராஜா காமராஜ்
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவுத் தொழிற்சாலை இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரீ-ரெக்கார்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். 'அக்கா குருவி' படத்தைப் பார்த்த பிறகே இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டார் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி இசையில் பல உணர்ச்சிகரமான இடங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மே மாதம் 'அக்கா குருவி' வெளியாக உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago