'மூக்குத்தி அம்மன்' படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை A&P நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மூக்குத்தி அம்மன்'. நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி, மெளலி, ஊர்வசி, இந்துஜா உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர்.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு க்ரிஷ் இசையமைத்து வருகிறார். கன்னியாகுமரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
இந்தப் படத்தின் கதைக்களம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், "சமூகப் பொறுப்புணர்வு உள்ள படங்களை நான் தொடர்ந்து எடுப்பேன். மதத்தின் பெயரால் எப்படி சிலர் நம்மைப் பிரிக்க நினைக்கிறார்கள் என்பதை 'மூக்குத்தி அம்மன்' பேசும். நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை" என்று தெரிவித்துள்ளார்.
» ரெஜினா கதை நாயகியாக நடிக்கும் 'சூர்ப்பனகை': ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» நாடகக் காதல், ஆணவக் கொலைகள் குறித்து அடுத்த படம்: 'அடங்காதே' இயக்குநர் அறிவிப்பு
இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அம்மன் வேடமிட்டு நயன்தாரா இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் மே மாதம் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'மூக்குத்தி அம்மன்' படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை A&P நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அந்நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago