கரோனா வைரஸ் அச்சம் எதிரொலி: பாரிஸ் பயணத்தை ரத்து செய்த தீபிகா படுகோன்

கரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தீபிகா படுகோன் தனது பாரிஸ் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. பல நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவிய நிலையில் உலகையே இன்று அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. உலக அளவில் கரோனா வைரஸ் தாக்கியோர் எண்ணிக்கை நாளுக் குநாள் அதிகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஐரோப்பாவிலும் கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளதால் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களை நோக்கி புகலிடம் தேடி வருவோருக்கு, தனது போக்குவரத்து நுழைவை மூடுவதாக ஹங்கேரி இன்று தெரிவித்துள்ளது. நேற்று தன் நாட்டுக்குள் நுழைய இருந்த 10 ஆயிரம் பேரை வழியிலேயே தடுத்து அனுப்பியது கிரேக்கம்.

இந்நிலையில் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள உலகப் புகழ் பெற்ற லூயிஸ் விட்டன் ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், கரோனோ வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாக தீடீரென பாரிஸ் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார் தீபிகா.

இதுகுறித்து தீபிகா படுகோனின் மேனேஜர் கூறும்போது, ''பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள லூயிஸ் விட்டன் ஃபேஷன் நிகழ்ச்சியில் தீபிகா கலந்துகொள்வதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பிரான்ஸில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகியுள்ளதாகச் செய்திகள் வருவதால் தீபிகாவின் பயணம் ரத்து செய்யப்படுகிறது'' என்றார்.

பிரான்ஸ் நாட்டில் இதுவரை 130 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE