சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் 'அரண்மனை 3' படத்தின் படப்பிடிப்பு சத்தமின்றி வட இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
'ஆக்ஷன்' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், மீண்டும் தனது காமெடி களத்துக்கே திரும்பியுள்ளார் சுந்தர்.சி. ஆகையால் தனது ஹிட் படமான 'அரண்மனை' படத்தின் 3-ம் பாகத்தைத் தொடங்கவுள்ளார். முதலில் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது.
படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால், தற்போது இந்தப் படத்தை சுந்தர்.சி தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இதில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால், படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது.
இதனிடையே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் உள்ள ராஜ்கோட்டில் உள்ள அரண்மனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வருகிறார் சுந்தர்.சி. இங்கு சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
ராஜ்கோட் படப்பிடிப்பு முடிந்தவுடன், சென்னையில் அரங்குகள் அமைத்து சில காட்சிகளைப் படமாக்கவுள்ளார் சுந்தர்.சி. இந்தப் படத்துக்கு சத்யா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டதால் சத்யா ‘அரண்மனை 3’ படத்தில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
37 mins ago
சினிமா
44 mins ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago