த்ரிஷாவுக்கு தயாரிப்பாளர் சிவா எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

'பரமபதம் விளையாட்டு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் த்ரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் தயாரிப்பாளர் சிவா.

24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பரமபதம் விளையாட்டு'. திருஞானம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகியுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்றது.

இதில் படத்தின் இயக்குநர் திருஞானம், இசையமைப்பாளர் மானஸி, விஜய் வர்மா ஆகியோருடன் தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். துபாயில் படப்பிடிப்பில் இருப்பதால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால், 'பரமபதம் விளையாட்டு' விழாவில் பேசிய பலருமே த்ரிஷாவை தாக்கிப் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சிவா பேசியதாவது:

''தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திருஞானம் எனது நெருங்கிய நண்பர். அவருடைய கடின உழைப்புக்கு இந்தப் படம் வெற்றியடைய வேண்டும். இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்தவர்கள் மிகச் சிறப்பாக இருந்ததாகச் சொன்னார்கள். அதிலும் குறிப்பாக அம்ரீஷின் பின்னணி இசையைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். சந்தோஷமாக இருந்தது.

திருஞானத்துக்கு சினிமா மீது இருக்கும் அளவு கடந்த காதல்தான் இந்தப் படம். இந்தப் படத்தை எடுப்பதற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது தெரியும். இன்றைக்குப் பெரிய ஹீரோக்களைப் போட்டு எடுக்கப்படும் படமே லாபகரமாக இருக்கிறதா என்றால் இல்லை. ஹீரோவே இல்லாமல் லாப நோக்கு இல்லாமல் ஒரு படம் பண்ணியிருக்கிறார். முழுக்க ரிஸ்க் எடுத்து திருஞானமே இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

பெரிய நாயகர்கள் படத்துக்கு, நாயகி வரவில்லை என்றாலும் நாயகனை வைத்து விளம்பரப்படுத்து விடலாம். தற்போது நம்மை நம்பி இவ்வளவு பணம் போட்டுப் படமெடுத்தவர்களுக்குக் கூட நிற்கவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். இந்தப் படத்துக்கு விளம்பரப்படுத்த த்ரிஷாவைத் தவிர வேறு யாருமே இல்லை. ஏனென்றால் மீதி அனைவருமே புதுமுகங்கள்.

அடுத்த வாரம் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அப்படியில்லை என்றால் அவர் வாங்கிய சம்பளத்தின் ஒரு பகுதியைத் தயாரிப்பாளருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக த்ரிஷாவுக்கு எச்சரிக்கையாகவே விடுக்கிறேன். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்”.

இவ்வாறு தயாரிப்பாளர் சிவா பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

மேலும்