திருமணமான இரண்டே வாரங்களில் பிரிய முடிவு: பமீலா ஆண்டர்சன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திருமணமான இரண்டே வாரங்களில் தனது கணவர் ஜான் பீட்டர்ஸை பிரிய முடிவெடுத்துள்ளார் நடிகை பமீலா ஆண்டர்சன்.

'பே வாட்ச் டிவி' தொடர் மூலம் புகழ் பெற்றவர் பமீலா ஆண்டர்சன். 'எ ஸ்டார் இஸ் பார்ன்', 'சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ்', 'வைல்ட் வைல்ட் வெஸ்ட்' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் பீட்டர்ஸ். 52 வயதான பமீலாவும் 74 வயதான பீட்டரும் கடந்த ஜனவரி 20-ம் தேதி அன்று, மலிபுவில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இன்னமும் இந்தத் திருமணத்தை இவர்கள் பதிவு செய்யவில்லை. தற்போது ஜானுடன் இருக்க வேண்டியது பற்றிதான் யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பமீலா.

"வாழ்க்கை ஒரு பயணம். காதல் ஒரு வழிமுறை. அந்த உலகத்துக்குப் பொதுவான உண்மையை மனதில் வைத்துக்கொண்டு, எங்களது திருமணப் பதிவை ஒத்திப்போட இருவரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம். எங்கள் நம்பிக்கையை முன்வைக்கிறோம். எங்களது அந்தரங்கத்தை மதிப்பதற்கு நன்றி. எங்கள் இருவருக்கும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு என்ன வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்ள பிரிந்து யோசிக்க இருக்கிறோம்" என்று பமீலா கூறியுள்ளார்.

இருவருக்கும் இது ஐந்தாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்