த்ரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா நடிக்கும் 'போகி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
'போகி' திரைப்படத்தை பாண்டியன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அருண்குமார், மந்த்ரா நடித்த 'ப்ரியம்' படத்தை இயக்கியுள்ளார்.
த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில், த்ரிஷா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், 'போகி' படத்தின் அறிவிப்பு த்ரிஷா மீண்டும் நடிப்பார் என்பதை உறுதியாக்கி இருக்கிறது.
'என்னை அறிந்தால்', 'பூலோகம்', 'அப்பா டக்கரு', 'லயன்', 'ரம்', 'போகி' என வரிசையாக படங்கள் இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் த்ரிஷா. இதில் 'போகி' திரைப்படம் முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்டது. எந்த இலக்கும் இல்லாமல் பயணிக்கும் மூன்று பெண்கள் பற்றிய கதைதான் படத்தின் மையக்கரு.
''விரைவில் 'போகி' படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது'' என த்ரிஷா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
55 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago