ஜன.11 - ஐனாக்ஸ் 2 - பகல் 12,15 மணி
VISARANAI | DIR: VETRIMAARAN | TAMIL | 2015 | 118'
மு.சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' என்னும் நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் கசப்பான சில உண்மைகளை அப்பட்டமாகப் பேசுகிறது. காவல் துறை விசாரணையின் நிஜ முகத்தின் குரூரத்தைக் காட்டுகிறது. காவலர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதையும் அவர்களால் எப்படி அதைச் செய்ய முடிகிறது என்பதையும் இயல்பாக வெளிப்படுத்துகிறது. அப்பாவிகள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிடும் இவர்கள், வேறொரு தளத்தில் இதே அமைப்பின் பலிகடாக்களாக மாறும் முரண்பாட்டையும் சித்தரிக்கிறது.
வெற்றி மாறன் முன்னிறுத்தும் யதார்த்தம் முகத்தில் அறையும் நடைமுறை யதார்த்தம். நம்மை முழுமையாக உள்ளே இழுத்துக் கொள்ளும் சித்தரிப்புத் திறனுடன் இந்த யதார்த்தம் முன்வைக்கப்படும்போது அது நமக்கு நெருக்கமான அனுபவமாக மாறிவிடுகிறது. இந்தச் சூழலில் யாருக்குமே நிஜமான பாதுகாப்பு இல்லை என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுவது தான் இந்தப் படத்தின் பெரிய வெற்றி.
திருப்பங்கள் எதையும் திணிக்காமலேயே விறுவிறுப்பைக் கூட்ட முடியும் என்பதை வெற்றி மாறன் காட்டியிருக்கிறார். பார்ப்பவர்கள் முகத்தில் ரத்தம் தெறிப்பதுபோல் உணரவைக்கும் மிகை வன்முறை, இரைச்சலிடும் பின்னணி இசை, மிகையான உணர்ச்சிகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, நேரடி சாட்சிபோல விரியும் காட்சிகள் படத்துக்குள் நம்மை இழுத்துக்கொள்கின்றன.
ஏழைகள், அப்பாவி மனிதர்களுக்குப் பாதுகாப்பைத் தர வேண்டிய காவல் நிலையங்கள், அவர்கள்மீது மிக எளிதாக மனித உரிமை மீறல்களைக் கட்டவிழ்த்து விடுவதை நம்பகத்தன்மையுடன் காட்டியிருக்கிறது படம். இந்த உரிமை மீறல்களின் நிஜமான சூத்திரதாரிகள் காவலர்களோ, காவல் அதிகாரிகளோ அல்ல; அவர்களை பொம்மைகளாக ஆட்டுவிக்கும், அதிகார வர்க்கம் என்பதைத் தோலுரித்துக் காட்டும் இரண்டாம் பகுதி, படத்தை விரிவான தளத்துக்குக் கொண்டுசெல்கிறது. காவல் துறை உள்ளிட்ட நமது குற்றவியல் நடைமுறை அமைப்பு சீரமைக்கப்பட வேண்டியிருக்கிறது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
அதிகார பீடத்தில் இருப்பவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் சென்று மனித உயிர்களை எடுக்கவும் தயங்காத ஜனநாயக பயங்கரவாதிகளாக மாறியிருப்பதை, விளிம்பு நிலை இளைஞர்களைக் கொண்டு சொன்ன விதத்தில் வலுவான அரசியல் படமாகவும் மாறியிருக்கிறது விசாரணை.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago